Saturday, December 04, 2004

பல்லவியும் சரணமும் - 10

இதற்கு முந்தைய 9 "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் கேட்கப்பட்ட 81 சரணங்களூக்கு, நீங்கள் கண்டுபிடிக்கத் தவறியவை just 5 மட்டுமே! நல்ல பாடல்களில் ஊறித் திளைத்திருக்கிறீர்கள் போலும் :-)

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ? கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ...
2. நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே, அமைதியின்றியே அலைய நேர்ந்ததே...
3. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன், பூவிலே மெத்தைகள்...
4. ஊடல் அவளது வாடிக்கை என்னைத் தந்தேன் காணிக்கை ...
5. நித்தம் நித்தம் உள்ளம் களிக்க, கற்ற வித்தை எங்கும் செழிக்க முத்து ரத்தினம் ...
6. கன்னித்தமிழ் தேவி, மைக்கண்ணன் அவள் ஆவி, நல்காதல் மலர் தூவி மாலையிட்டாள்...
7. தூக்கம் கெட்டு கெட்டு, துடிக்கும் முல்லை மொட்டு, தேக்குமர தேகம் தொட்டு ...
8. அஞ்சு விரல் பட்டால் என்ன? அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன? தொட்ட சுகம்...
9. உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா! நனைந்த பொழுதினில் ...
10. பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள், மாமனைப் பாரடி கண்மணி என்றாள் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

6 மறுமொழிகள்:

Jayaprakash Sampath said...

1.வானம் கீழே வந்தால் என்ன - தூங்காதே தம்பி தூங்காதே
5. ராகதீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை
7. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
8. சின்னச் சின்ன, தூறல் மின்ன - செந்தமிழ்ப்பாட்டு

ரவி ஸ்ரீநிவாஸ் said...

6 malligai mullai pon mozhi killai annan oru aalalayam
4 aval oru navarasa natagam ulagam sutturm valiban
8 puttham puthia puthkame arasa kattalai
10 malargalai pol thangai paasa malar

rest i need sometime to guess

Chandravathanaa said...

2-சதாராம்
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போனதே நிலையானதே

enRenRum-anbudan.BALA said...

Thanks for playing by the rules!!


Icarus,
your answer for 1st is wrong. Answer is
1. இது ஒரு நிலாக்காலம், இரவுகள் கனாக் காணும்! --- டிக்டிக்டிக்
Also, there was a typo error. What you mentioned as answer for 8th should have been the answer for 9th saraNam, Right?
I will give you 3/4, 75% :-))

Jsri,
Your answers for 4 and 6 are incorrect! ரவி ஸ்ரீநிவாஸின் பின்னூட்டத்தைப் பாருங்கள்! ஆனால், 6-வதுக்கான திரைப்படம் சரியாகக் கூறியதால், உங்களுக்கு 50 மதிப்பெண்கள் :-(
எப்போதும் போல் பிறருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள் என நம்புகிறேன் :-))


ravi srinivas,
Great going, 100% marks for whatever you attempted!

சந்திரவதனா,
2-வது சரணத்துக்கான பல்லவியை நீங்கள் தான் சொல்வீர்கள் என்பது எதிர்பார்த்தது தான்!
"அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போனதே நிலையானதே" என்பது

"அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலையானதே" என்றிருந்திருக்க வேண்டும்.

என்றென்றும் அன்புடன்

பாலா

தங்ஸ் said...

இது அநியாயம் பாலா! பல்லவி & சரணம் பதிவ நீங்க வார இறுதியில போடறீங்க.திங்கள் வந்து பாத்தா எனக்குன்னு ஒண்ணு கூட மிச்சம் இல்லை..

enRenRum-anbudan.BALA said...

தங்கம்,
வாரத்தின் எந்த நாள்ல போடணும்னு நீங்க சொன்னீங்கன்னா, அப்படியே செஞ்சுட்டா போச்சு :-) நம்ம மக்கள் தான் 'பல்லவியும் சரணமும்' பதிவை பார்த்தவுடனே பாஞ்சு பாஞ்சு பல்லவியை கண்டு பிடிச்சுடராங்களே!!!
என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails